Monday, February 15, 2016

14.02.2016 (Feb-14th)



அன்பு நண்பர்களே நேற்று (பிப்-14) மேச்சேரியில் உள்ளஅன்னை தெரசா கருணை இல்லக் குழந்தைகளுடன் நமது நன்பர்கள் கொண்டாடிய நிகழ்வுகளைபற்றி உங்களுடன் சிலபகிர்வுகள்........

காலை 9.30மணியவில் நமது நண்பர்களுடன் கருணை இல்லத்தை சென்றடைந்தோம்.

முதலில் அங்குள்ள இரண்டு சிறுவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு ஏராளமான பலூன்களால்
வண்ணமயமான தோரணங்களை தயார் செய்தோம்.

10.30 மணியளவில் நமது குழுவின் மகளீர் மதிய உணவை தயார் செய்யும் பணியில் அமர்ந்தனர்.

நமது குழு உறுப்பினர்கள் & நண்பர்கள் சிறார்களுடன் பந்து விளையாட்டுக்கள் விளையாடி
நம்மவர்கள் மகிழ்ந்து சிறுவர்களையும் மகிழவைத்தார்கள். பிறகு அனைவரும் வண்ண வண்ண ஐஸ் சாப்பிட்டு விளையாட்டினை தொடர்ந்தோம். நமது மகளிர் சரியாக 1மணியளவில் மதிய உணவை சிறப்பாக அசைவ உணவு சமைத்து முடித்தனர்.


சிறிய இளைப்பாறலுக்கு பிறகு மதியம் 2மணியளவில் கருனை இல்ல சிறுவர்களுக்கு இறைப் பிராத்தனையுடன் நம் மக்களின் அன்பையும் சேர்த்து பரிமாறப்பட்டது. சிறுவர்களுடன் மகிழ்வுகளுக்கிடையே நாங்களும் உணவருந்தி மகிழ்ந்தோம். இந்த இனிய தருணத்தில் நமது நண்பர் திரு.ராஜ் மோகன் அவர்களின் துனைவியார் திருமதி. சாந்தி அக்கா & நிலா ஆகியோர்
குழந்தைகளுக்கு உடல் சார்ந்த மற்றும் உள்ளம் சார்ந்த சில விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர். பின்னர் கல்வி சார் நல் அறிவுரைகளை வழங்கினார்கள். 

நிகழ்சியின் இறுதியாக விழா நாயகர்களான மாஸ்டர்ஸ்.சக்தி வேல், வேல் முருகன் ஆகிய

இரு சிறுவர்களும் மேடைக்கு அழைத்து வரப்பட்டு அவர்களுடன் நமது சிறார்களும்
இனைந்து அனைவரும் ஒன்றாக பலத்த கரகோஷங்களுக்கும் வாழ்த்துக்களுக்கும்
இடையே கேக் வெட்டப்பட்டு அதனுடன் பழங்கள், பழரசங்கள் , சாக்லெட்டுகள்
மற்றும் லேஸ் போன்ற உணவு பொருள்களும் வழங்கி மகிழ்விக்கப் பட்டது.
இத்தருணத்தில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த தன்னார்வல நண்பர் ஒருவரும்
நம்முடன் இனைந்து மகிழ்சியை பரிமாரிக்கொண்டு சிறப்பு சேர்த்தார்.






மாலை 5மணியவில் நிறைந்த மனதுடனும்,அளவில்லா மகிழ்வுடனும் பிரிய மனமின்றி திரும்ப வருவோம் என்ற எண்ணத்தில் கருனை இல்லச்சிறுவர்களை பிரிந்தோம்.

குழந்தைகளுடன்
இருந்த இந்த இனிய தருணத்தில்
எங்களின்
கவலைகள்
சங்கடங்கள்
வெறுப்புகள்
பொறாமைகள்😯
துயரங்கள்
மன உளைச்சல்கள்
ஆகியவற்றை மறந்து
நம்மையும் சிறுவர் பருவத்திற்கே
அழைத்துச் சென்ற

அன்னை தெரேசா கருணை இல்லத்தின்
குழந்தைகள் எப்போதும்
மன மகிழ்வுடனும்
உடல் ஆரோக்கியத்துடனும்
நற்பண்புகளுடனும்
நீண்ட ஆயுளுடனும்
நீடூழி வாழ

எல்லாம் இறைவனை பிராத்திக்கிறேன்..
என்றும் அன்புடன் தனசேகரன்...